இன்று மகளிர் தினம்(Womens Day).
எனக்கு
தெரிந்து எல்லோரும் கூட வேலை செய்யும் அல்லது கூட படிக்கும் அல்லது படித்த
தோழிகளுக்கும் , தெரிந்த பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...
வாழ்த்து சொல்லும் அதே வேலையில், எல்லோருக்கும் போதுவாக நான் கேட்கும் கேள்வி....
மகளிர் தினம் (Womens Day) என்றால் என்ன???
பெண்களுக்கு
பாதுகாப்பில்லாத இந்த நேரத்தில், பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத இந்த
நேரத்தில் மகளிர் தின வாழ்த்து சொல்வதன் அர்த்தம் என்ன?? பலன் என்ன??
சிறுசேரியில்
நடந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லா நிறுவனங்களிலும் பெண் பணியாளர்கள் late
night என படும் இரவு நேர வேலையை தவிர்க்கவும் என்று கேட்டு கொண்டுள்ளது.
மேலும் இரவு 7.30 மணிக்கு (எங்கள் நிறுவனத்தில் 7.30 மணிக்கு மேல்
கூடாதென்றுவிட்டார்கள், நிறுவனத்திற்கு இது மாறலாம்) மேல் யாரும் இருக்க
கூடாதென்பது கண்டிப்பான ஒன்று....
அதே
வேளையில் டுவிட்டெர்-ல் J அன்பழகன் என்னும் பேரில் பதிவிட பட்ட ஒன்று இதோ
"Govt shud immediately ban d night shift for women IT employees and
restrict the work times for women's from 9am-5pm"
இதில்
இருந்து என்ன சொல்கிறார்??? women IT employees க்கு மட்டும் தான் இது
போன்ற பிரச்சனைகள் உள்ளது என்கிறாரா?? இல்லை 9am-5pm மட்டும் தான் பெண்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்கிறாரா?? இல்லை தமிழகத்திலோ இல்லை
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை ஒத்துக்கொள்கிறாரோ???
இல்லை பெண்களுக்கெல்லாம் பாதுகாப்பு குடுத்துட்டு இருக்க முடியாது
என்கிறாரா???
என்ன
ஒரு அவல நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்??? இந்த நேரத்தில் மகளிர் தின
வாழ்த்து முக்கியமா?? இல்லை வாழ்த்துவதனால் அவர்களுக்கு பாதுகாப்பு
இருக்கிறதென்று அர்த்தமா?? இல்லை இது போன்ற சம்பவம் நடக்காது என்று
அர்த்தமா??
எந்த தைரியத்தில் வாழ்த்து சொல்ல எல்லோருக்கும் மனம் வருகிறது, பெண் பாதுகாப்பை உறுதி செய்யாமல்???
அல்லது
அவர் சொன்ன கருத்திற்க்கு ஒரு பெண் பதில் போட்டு இருந்தது (முதலில்
சிரிக்க வைத்தது) சிந்திக்கவும் வைத்தது, வெட்கி தலை குனியவும் வைத்தது...
இதோ அப்பதில் "@JAnbazhagan madhyana nerathula rape panna mattomnu
ambillainga sathiyam panni irukkangala?" என்று இருந்தது.
எந்த
மாதிரியான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்??? அதற்காக நான் மகளிர் தின
வாழ்த்து சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை... அவர்களுக்கு பாதுகாப்பையும்
சுதந்திரத்தையும் உறுதி செய்து விட்டு வாழ்த்து சொல்வோமே. முதலில் பெண்ணை
பெண்ணாக பார்ப்போமே...
---சாமுர---
08-03-2014
Comments
Post a Comment