கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே...
அப்போதிலிருந்து எந்த பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்று யாருக்கும் தெரியாது... ஆனால் அதிக கட்டணம் என்று மட்டும் நன்றாக தெரியும்...
அதிலும் 1 to 1, Non -Stop, High-way Rider, super-deluxe, ultra-deluxe அது இதுன்னு எவ்வளவு... எல்லாம் கட்டணம் அதிகமாக வசூலிக்க இப்படி எல்லாம் பெயர் வைத்தார்கள்...
ஆனால் நேற்று இரவு நான் கண்ட காட்சி அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது...
ஆம் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.. அதன் முகப்பு கண்ணாடியில் எழுதி இருந்தது தான் அதற்கு காரணம்..
சில காலமாக நாம் பார்த்திருக்கலாம் "சாதாரண கட்டணம்" என்று... ஆனால் நான் பார்த்தது அப்படி அல்ல.. "குறைந்த கட்டணம்" என்று... இது தான் என் அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் காரணம்...
அப்படி ஏன் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பிறகு ஏன் இப்படி எழுத வேண்டும்...
---சாமுர---
07-Feb-2014
Comments
Post a Comment