பெண்ணே உன்னை ஆதரிக்குறேன்



            பெண்ணியம் பற்றி பேசுபவர்களா நீங்கள் ??? பெண்கள் மீது அக்கறை உள்ளவரா??

படத்துல இப்பெல்லாம், தம் அடிக்குரப்பையும், தண்ணி அடிக்குரப்பையும் ...... புகை பிடித்தால் புற்றுநோய் வரும்.புகை உயிரை குடிக்கும்..... மது நாட்டுக்கும் வீட்டுக்கும், உடலுக்கும் கேடுன்னு போடுறாங்க...

பரதேசி பசங்க பாலியல் (கற்பழிப்பு, விபச்சாரம், பெண் கொடுமை ) சம்மந்தமான காட்சி வந்தா மட்டும் எதுமே போடமாட்டுரன்னுக... இங்க தான் இவன்களோட வக்குற புத்தி நல்ல தெரியுது ... (இது போன்ற காட்சிகளை தவிர்க்கலாமே அல்லது "பெண்கள் வீட்டின் கண்கள் , பெண் கொடுமை தண்டனைக்குரியது" இது போன்று ஏதாவது, கண்ணுக்கு தெரிவது போல் பெரிய எழுத்துக்களில் போடலாமே...)

இத எதிர்த்து ஏன் யாரும் போராடவில்லை?? (மகளிர் குழுக்கள் தான் போரடனுமா என்ன??)

பெண்கள் மீது மரியாதையும், அக்கறையும் இருக்கும் யார் வேணாலும் போராடலாமே... இது வரை ஏன் (எனக்கு தெரிஞ்சு ) யாரும் போராடவில்லை ...


(பெண்ணியம் பற்றி பேசும் RJ பாலாஜி ஏன் பேசல... சமூக சிந்தனை / அக்கறைன்னு பேசும், சாப்ட்வேர் பொறியாளர்கள் பற்றி மேடைக்கு மேடை பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ஏன் இதை பற்றி பேசல?? )

இன்று உங்களில் ஒருவனாக இருக்கும் நான் இங்கு என் முதல் குரலை ஓங்கி ஒழிக்க சொல்கிறேன்... 

யாருக்கெல்லாம் பெண்கள் மீது அக்கறையும் நாட்டின் கலாச்சாரம் மீதும் அக்கறை இருக்கிறதோ நீங்களும் போராட தயாராகுங்கள் ....

அனைவருக்கும் தெரிந்த டெல்லி போன்ற, சிலர்க்கு மட்டும் தெரிந்த இது போன்ற பெரும் கொடுமைகளை தடுப்போம் வாருங்கள்... கண்ணியம்மிக்க நாட்டினை காக்க ....


---சாமுர---   

Comments